உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாட்டு பொங்கலை யொட்டி மஞ்சு விரட்டு நிகழ்ச்சி

மாட்டு பொங்கலை யொட்டி மஞ்சு விரட்டு நிகழ்ச்சி

விழுப்புரம், : மாட்டு பொங்கலை யொட்டி, விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி களில் மாடுகளை அலங்க ரித்து வழிபட்டு மஞ்சு விரட் டும் நிகழ்ச்சி நடந்தது.மாட்டு பொங்கலை யொட்டி, விழுப்புரம் நகரில் வி.மருதுார், சாலாமேடு, கீழ்பெரும்பாக்கம் மற்றும் சாலை அகரம், கோலியனுார், மரகதபுரம், நன்னாடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் நேற்று மாலை மாடுகளை அதன் உரிமையாளர்கள் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து, மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்தனர்.தொடர்ந்து, மாடுகளின் கொம்புகளில் வண்ண பலுான்களை கட்டியதோடு, மட்டுமின்றி மாட்டு வண்டிகளிலும் வண்ண நிற கலர் பேப்பர்கள் மூலம் அழகுப்படுத்தினர்.அலங்கரிக்கப்பட்ட மாடுகள் அனைத்தும் ஊர் மற்றும் நகர பகுதிகளில் பொதுவாக உள்ள கோவில்களின் அருகே மொத்தமாக அழைத்து வரப்பட்டு, பொதுமக்கள் தீபாராதனை காட்டி வழிப்பட்டனர்.பின், மாடுகளுக்கு மஞ்சள் நீரை தெளித்து மாலை 6:00 மணிக்கு மாடுகளை அவரவர் பகுதிகளில் விரட்டி செல்லும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில், பலர் குடும்பங்களோடு, மாட்டு வண்டிகளில் ஏறி கொண்டு தங்களின் பகுதிகளை சுற்றி சென்று மகிழ்ந்தனர். இதையொட்டி, விழுப்புரம் நகரம் மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் மாட்டு பொங்கல் விழா களைகட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்