மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
23-Sep-2024
மரக்காணம்: மரக்காணம் அ.தி.மு.க., கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.மரக்காணம் அடுத்த முருக்கேரியில் கிழக்கு ஒன்றியம் சார்பிலும், எண்டியூரில் மேற்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர்கள் கோவிந்து, செல்வராசு ஆகியோர் தலைமை தாங்கினர். அர்ஜூனன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், நடராஜ் வரவேற்றனர்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் பேசியதாவது: மரக்காணம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்த பின் நடக்கும் முதல் செயல்வீரர்கள் கூட்டம். வரும் சட்டசபை தேர்தலில் நிர்வாகிகள் அனைவரும் கட்சி பணியை செய்தால் வெற்றி உறுதி. தி.மு.க., தனித்து நின்றால் 15 சதவீத ஓட்டுகள் கூட வாங்காது. ஆனால் அ.தி.மு.க., தனியாக நின்று அதிக ஓட்டுகள் பெறும் என்றார்.மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மேற்கு ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் குமரவேல், மாவட்ட பிரதிநிதி முருகன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சத்திபெரியதம்பி, ஒன்றிய ஐ.டி.விங்., செயலாளர் பழனிசாமி, மாவட்ட ஐ.டி.விங்., துணை செயலாளர் சரண்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
23-Sep-2024