உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் மஸ்தான் எம்.எல்.ஏ., வேண்டுகோள்

பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் மஸ்தான் எம்.எல்.ஏ., வேண்டுகோள்

செஞ்சி: 'பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்' என எம்.எல்.ஏ., பேசினார்.மேல்மலையனுார் ஒன்றியத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா செஞ்சியில் நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடந்த விழாவிற்கு, ஆரணி எம்.பி., தரணிவேந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், கண்மணி, முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் டயானா வரவேற்றார்.விழாவில், 600 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கி மஸ்தான் எம்.எல்.ஏ., பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் 4 ஆண்டுகளில் ஏழை, எளிய மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.விலையில்லா பஸ் பயணம், மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வசதி, உரிமைத் தொகை, கல்லுாரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கர்ப்பிணிகள் பிறக்கும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்' என்றார்.பேரூராட்சி சேர்மன்கள் மொக்தியார், முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, செல்வி ராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், மருத்துவ அலுவலர் யோகப்பிரியா பங்கேற்றனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ