உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசின் தடை உத்தரவை மீறி இறைச்சி விற்பனை அமோகம்

அரசின் தடை உத்தரவை மீறி இறைச்சி விற்பனை அமோகம்

திண்டிவனம்: திருவள்ளுவர் தினமான நேற்று அரசு உத்தரவை மீறி இறைச்சிக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டது.தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு முக்கிய பங்காற்றிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.இதே நாளான நேற்று திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது. இதனால் நேற்று இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி வழக்கம் போல் அனைத்து இறைச்சி கடைகளும் செயல்பட்டது.நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதால் எந்த பயமும் இல்லாமல் இறைச்சி விற்பனை அமோகமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி