பெண் வயிற்றில் கேன்சர் கட்டி அகற்றி மெட்வே மருத்துவமனை சாதனை
விழுப்புரம்: விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில், பெண் வயிற்றில் இருந்த 5.5 கிலோ இரப்பை கேன்சர் கட்டி அகற்றப்பட்டது.விழுப்புரம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம்,63; வயிற்று வலி, சர்க்கரை நோய் மற்றும் இதய நோயால் அவதிப்பட்டு வந்த இவர், விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை, டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், வயிற்றில் கட்டி இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, கடந்த 3 ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நிபுணர் சவுந்தர்ராஜன், டாக்டர்கள் ரமேஷ், சரண்யா உள்ளிட்ட குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வயிற்றில் இருந்த 5.5 கிலோ எடையுள்ள இரப்பை கேன்சர் கட்டியை அகற்றினர். அவரது உடல்நலம் தேறியதை தொடர்ந்து 13 ம் தேதி வீடு திரும்பினார்.