மினி வேன் கவிழ்ந்து விபத்து: மூவர் படுகாயம்
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே டாடா ஏஸ் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.விழுப்புரம் அடுத்த வளவனுாரைச் சேர்ந்தவர் கணேசன், 49; டாடா ஏஸ் மினி வேன் டிரைவர். கடலுாரில் இருந்து சிமெண்ட் பலகை ஏற்றிக் கொண்டு கண்டாச்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக பஞ்சமாதேவியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன், 43; பாரதிதாசன், 35; திருவதிகையைச் சேர்ந்த விமல்ராஜ், 25; வேனில் வந்தனர்.கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐ.டி.ஐ அருகில் வந்தபோது மினி வேனின் பின்பக்க டயர் வெடித்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர். கண்டாச்சிபுரம் போலீசார் காயமடைந்தவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த வேன் மற்றும் சிமெண்ட் பலகையால், விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.