உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடூர் அணையில் அமைச்சர் ஆய்வு

வீடூர் அணையில் அமைச்சர் ஆய்வு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வீடூர் அணையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்து நீர்வரத்து நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.திண்டிவனம் அடுத்த வீடூர் அணையில் நேற்று 1:00 மணியளவில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நீர்வரத்து நிலவரம் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, வீடூரில் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இருளர் குடும்பத்தினருக்கு மதிய உணவு வழங்கியபின் நிருபர்களிடம் கூறுகையில், 'கடந்த முறை பெய்த மழையை விட தற்போது அதிகளவு பெய்துள்ளது. வீடூர் அணைக்கு வினாடிக்கு 8,139 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணை பாதுகாப்பு கருதி 9 கதவுகள் வழியாக அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் புதுச்சேரி மாநிலம் வழியாக கடலில் கலக்கும். எனவே சங்கராபரணி ஆற்றின் கரையோரம் உள்ள விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி மாநில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.கலெக்டர் பழனி, நீர்வளத்துறை செயற் பொறியாளர் ேஷாபனா, உதவி செயற்பொறியாளர் ரமேஷ் , உதவி பொறியாளர் பாபு, தாசில்தார் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை