உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும் நிர்வாகிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அலர்ட்

தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும் நிர்வாகிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அலர்ட்

திண்டிவனம் : திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது.விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மண்டல பொறுப்பாளராக வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் நியமிக்கட்டுள்ள நிலையில், நேற்று முதன்முறையாக நடந்த கூட்டத்திற்கு, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், தொகுதி பொறுப்பாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி (மயிலம்) ஜாபர்அலி (திண்டிவனம்), கார்த்திகேயன் (செஞ்சி) ஆகியோர் பேசினர்.முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள் மாசிலாமணி, சேதுநாதன், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், ராஜராம், மணிமாறன், பழனி.திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி.ஆரணி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அசோகன், முன்னாள் நகர செயலாளர் கபிலன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம், மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியத்தில், கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டு குறைவாகவும், லோக்சபா தேர்தலில் ஓட்டு அதிகமாகவும் வந்தது குறித்து பேசினார். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மயிலம், திண்டி வனம், செஞ்சி ஆகிய3 தொகுதிகளிலும் வரும் தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும். அனைவரது கூட்டு முயற்சியால்தான் வெற்றி பெற முடியும்.தருமபுரி மாவட்ட பொறுப்பாளராக இருந்த போது, அந்த மாவட்டத்தில் செயல்படாத நிர்வாகிகளை கண்டுபிடித்து, கட்சி தலைமைக்கு புகார் தெரிவித்து, செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்தேன்.அதுபோல் நிலைமை ஏற்படாமல் இருக்க, இந்த மாவட்டத்தில் நிர்வாகிகள் தி.மு.க., வெற்றி பெற பாடுபட வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை