உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மல்லர் கம்பம் குழுவினருக்கு அமைச்சர் பொன்முடி பாராட்டு

மல்லர் கம்பம் குழுவினருக்கு அமைச்சர் பொன்முடி பாராட்டு

விழுப்புரம்; மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழுவினருக்கு, அமைச்சர் பொன்முடி பாராட்டு தெரிவித்தார்.சென்னையில் நடைபெற்ற சங்கமம் கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற 'கை கொடுக்கும் கை' மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழுவினர் பங்கேற்று பரிசு பெற்றனர். இந்த குழுவைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பிரபாகரன், திருமுருகன், சபரிவேல், சபரி, முத்து பூமிநாதன் கரிகாலன், சந்தானம் மணிகண்டன் பிரதாப் ஆகியோரை பாராட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். இக்குழுவினருக்கு, விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைசசர் பொன்முடி, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து, நிதியுதவி வழங்கினர். நிகழ்ச்சியில், தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் தயா இளந்திரையன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, விசுவநாதன், தொ.மு.ச., மணி, முன்னாள் கவுன்சிலர் கபாலி, நகர பொருளாளர் இளங்கோ, தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை