உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தட்டிக்கொடுத்து வேலை வாங்க மாலை எம்.எல்.ஏ., புது டெக்னிக்

தட்டிக்கொடுத்து வேலை வாங்க மாலை எம்.எல்.ஏ., புது டெக்னிக்

சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால், திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, பூமி பூஜை நடத்துவது என விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் ஆளும் கட்சி ஆர்வம் காட்டி வருகிறது.தற்போது நடைபெறும் ஒவ்வொரு பூமி பூஜையிலும் தி.மு.க., நிர்வாகிகள் 25 பேருக்கும் மேற்பட்டோருக்கு மாலைகளை அணிவித்து, கட்சி நிர்வாகிகளை மஸ்தான் எம்.எல்.ஏ., குஷிப்படுத்தி வருவது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டிவனம் நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் 4.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடைகள் கட்டுவதற்கான பூமி பூஜை, சந்தைமேட்டில் 5.56 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜையில், செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.சமீப காலமாக இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நகரமன்ற தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர் என 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை வரிசை கட்டி நிற்க வைத்து, மாலை அணிவித்து பூமி பூஜையை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.தேர்தல் நெருங்குவதால் கட்சி நிர்வாகிகளை வைத்து வேலை வாங்க வேண்டும் என்பதால் அவர்களை குஷிப்படுத்த மாலை அணிவித்து கவனிப்பதாக கட்சியினரே முனுமுனுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை