உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்காணிப்பு மைய பணி எஸ்.பி., ஆய்வு

கண்காணிப்பு மைய பணி எஸ்.பி., ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் காவல்துறை சி.சி.டி.வி., கேமரா தனி கட்டுப்பாட்டு அறை கட்டுமான பணிகளை எஸ்.பி., ஆய்வு செய்தார். விழுப்புரம் நகரில் காவல்துறை சார்பில், முக்கிய சாலைகள், சந்திப்புகளில் சி.சி.டி.வி., கேமரா அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கேமரா பதிவுகள் கேபிள்கள் மூலம் ஒருங்கிணைத்து கண்காணிக்க விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் உள்ள காலி இடத்தில் கண்காணிப்பு மையம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த அறை கட்டுமான பணியை எஸ்.பி., சரவணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ