உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எம்.சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் ; திண்டிவனத்தில் பரபரப்பு

எம்.சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் ; திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம் : ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி, டிப்பர் லாரி உரிமையாளர்கள் சப்கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் கிரஷர் மற்றும் எம்.சாண்ட் பிளாண்ட் அதிக அளவில் உள்ளது. இங்கிருந்து தினந்தோறும் அதிக அளவில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியன பல்வேறு இடங்களுக்கு டிப்பர் லாரி மூலம் கொண்டு செல்லப்படுகின்றது.தற்போது ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியன விலை உயர்ந்துவிட்டதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் , விலையை குறைத்து விற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் கடந்த 17 ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று பிற்பகல் 1 மணியளவில், திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையிலுள்ள சப்கலெக்டர் அலுவலகத்தை, டிப்பர் லாரி மற்றும் லாரி டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் நுாற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர்கள் தரணேஸ்வரி, பிரகாஷ் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சப்கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் போராட்டம் நடத்தியவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலையை குறைக்காவிட்டால், அனைவரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை