மேலும் செய்திகள்
செங்கமடையில் குளவிகள் அழிப்பு
09-Aug-2025
விழுப்புரம்:குளவி கொட்டியதில் இசைக்கலைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் குளக்கரை பகுதியில் நேற்று காலை ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அங்கு மரத்திலிருந்த விஷ குளவிகள் திடீரென பறந்து, அங்கு திரண்டிருந்தவர்களை கடித்தது. இதில், 20 பேர் காயமடைந்தனர். வெளியே நின்றிருந்த பொதுமக்கள் பலர் ஓட்டம் பிடித்து தப்பினர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், குளவி கொட்டி பாதிக்கப்பட்ட அதே கிராமத்தை சேர்ந்த இசைக்கலைஞர் கோபு, 55, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வளவனுார் போலீசார் மற்றும் விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மரத்திலிருந்த விஷ குளவி கூடுகளை அழித்தனர்.
09-Aug-2025