உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தைகளின் கல்வி பணியை துவக்குவதில் பெருமிதம்: சரஸ்வதி கல்வி குழும தாளாளர் முத்து சரவணன் பெருமிதம்

குழந்தைகளின் கல்வி பணியை துவக்குவதில் பெருமிதம்: சரஸ்வதி கல்வி குழும தாளாளர் முத்து சரவணன் பெருமிதம்

விழுப்புரம்: 'குழந்தைகளின் கல்விப் பணியை, 'தினமலர்' நாளிதழ் எங்களுடன் சேர்ந்து துவக்கியதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என, சரஸ்வதி கல்வி குழும தாளாளர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழுடன் இணைந்து வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்திய சரஸ்வதி கல்வி நிறுவனத்தின் தாளாளர் முத்துசரவணன் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல்லாக, 'தினமலர்' நாளிதழ் மற்றும் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் இணைந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இது, குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்க வித்தாக அமைந்துள்ளது. 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த கல்வி கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். விழுப்புரத்தில் முதன் முறையாக சரஸ்வதி கல்விக் குழுமத்தில், இந்நிகழ்ச்சி செயல்படுத்துவதில் பெருமையாக உள்ளது. குழந்தைகளின் கல்வி துவக்க நாளை வித்யாரம்பம் நிகழ்ச்சியாக நடத்துவது என்பது புதிது அல்ல. பண்டைய காலம் தொட்டே நம் முன்னோர், நெல்மணிகளைக் கொண்டு விஜயதசமியான இந்த நன்னாளில் தமிழ் உயிர் எழுத்துக்களை எழுத வைத்தனர். அதை நாம் இன்றும் மறக்காமல் நம் பண்பாட்டை சீர்துாக்கி பார்க்கின்ற வகையில் 'தினமலர்' நாளிதழும், சரஸ்வதி கல்வி குழுமமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதில் எஸ்.பி., சரவணன் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. கல்வி என்பது அனைவருடைய அடிப்படை உரிமை. இதை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது நமது தார்மீக கடமையாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் இருந்து குழந்தைகளுடன் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இது, அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக பெருமிதம் கொள்கிறோம். இவ்வாறு முத்து சரவணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி