நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலர் அ.தி மு.க.,வில் ஐக்கியம்
விழுப்புரம்; நாம் தமிழர் கட்சியின், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் 50 பேர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் தலைமையில் நிர்வாகிகள் 50 பேர், அந்த கட்சியிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர். நாம் தமிழர் கட்சியின் விக்கிரவாண்டி தொகுதி பொறுப்பாளர் பாரூக், ஒன்றிய துணை தலைவர் ஜான்கென்னடி, ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் வசந்த், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வேலு உள்ளிட்டோரும் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சக்கரபாணி, ஒன்றிய செயலாளர் முகுந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.