நாராயணி நிதி லிமிடெட் புதிய கிளை திறப்பு விழா
செஞ்சி: செஞ்சியில் ஸ்ரீநாராயணி நிதி லிமிடெட் 68வது கிளை திறப்பு விழா நடந்தது.திருவாரூர் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீநாராயணி நிதி லிமிடெட் நிறுவனத்தின் 9 புதிய கிளைகள் நேற்று தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக, 68வது கிளை செஞ்சியில், திண்டிவனம் சாலையில் நடந்தது.செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் புதிய கிளையை திறந்து வைத்தார். வி.ஆர்., டெய்ரி இயக்குனர் ரங்கநாதன், பாதுகாப்பு பெட்டக பிரிவை திறந்து வைத்து வாழ்த்திப்பேசினார்.முதுநிலை பொது மேலாளர் கிருஷ்ணமூரத்தி வரவேற்று நிறுவனத்தின் கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள், நிதி நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் டிபாசிட் திட்டங்கள், கடன் வசதிகள் குறித்து விளக்கி பேசினார்.சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தார். நெல் அரிசி வர்த்தகர் முருகன், வர்த்தகர் சங்க செயலாளர் வெங்கட், மதிப்பியல் தலைவர் கலியமூர்த்தி, துணைத் தலைவர் ராஜகோபால், ஆலோசகர் ஷேக்சமியுல்லா மற்றும் முன்னணி வாடிக்கையாளர்கள், நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர். வாடிக்கையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கிளை மேலாளர் விஜய் நன்றி கூறினார்.