இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் தேசிய மாணவர் படை விழா
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் தேசிய மாணவர் படை துவக்க விழா நடந்தது. பள்ளி தாளாளர் செல்வ மணி தலைமை தாங்கினார். பிரியா செல்வமணி முன்னிலை வகித்தார். பட்டாலியன் ஹவில்தார் மேஜர் தேவசேனா, ஹவில்தார் செல்வகுமார் பங்கேற்றனர். விழாவில், 6வது தமிழ்நாடு பட்டாலியன்என்.சி.சி., காமண்டிங் அலுவலர் சக்கரவர்த்தி பேசுகையில், 'மாணவர்களின் தனித்திறன் இதுபோன்ற சிறப்பு பயிற்சியில் மட்டுமே வெளிப்படும். திறன்களை செம்மைப்படுத்தி நாட்டின் 3 படைப் பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பணிபுரியும் வாய்ப்பு எதிர்காலத்தில் அமையும்' என்றார். விழாவில், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தேசிய மாணவர் படை உறுப்பினர்கள் 25 பேர் உடற்தகுதி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.