உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய தரச்சான்றிதழ் ஏ பிளஸ்; தெய்வானை கல்லுாரி சாதனை

தேசிய தரச்சான்றிதழ் ஏ பிளஸ்; தெய்வானை கல்லுாரி சாதனை

விழுப்புரம்; விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் தேசிய தரச்சான்றிதழில் 4வது முறையாக நாக் 'ஏ பிளஸ்' பெற்று சாதனை படைத்துள்ளது.சாதனை விழாவிற்கு, இ.எஸ்., கல்விக்குழுமங்களின் தாளாளர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சாந்தி, தேசிய தரச்சான்றிதழில் 'ஏ பிளஸ்' தகுதி பெற காரணமாக இருந்த பேராசிரியர்கள், அலுவல்சார் மற்றும் சாராத பணியாளர்களின் பணிகளை பாராட்டி விருது வழங்கினார்.தொடர்ந்து, இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழுமம் நிர்வாக தலைவர் செந்தில்குமார், இந்த கல்லுாரி 4வது முறையாக 3.29 நிகர புள்ளிகள் பெற்று பெரும் முன்னேறத்தோடு 'ஏ பிளஸ்' தகுதியை பெற்றுள்ளதையும், பல்கலைக்கழக மானியக்குழு புள்ளி விபரப்படி, தமிழக அளவில் சுயநிதி மகளிர் கல்லுாரிகளில் 4ம் இடத்தை பெற்றததாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ