உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் பொறியியல் கல்லுாரியில் தேசிய புதுமை தொழில்நுட்ப விழா

மயிலம் பொறியியல் கல்லுாரியில் தேசிய புதுமை தொழில்நுட்ப விழா

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான புதுமை தொழில்நுட்ப விழா 'டெக்னோவேஷன் 2025' நடைபெற்றது. கல்லுாரி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குநர் செந்தில் சிறப்புரையாற்றினார். முன்னதாக, முதல்வர் ராஜப்பன் வரவேற்றார். எச்.சி.எல்., நிறுவனம் விற்பனை துறை தலைமை பொறுப்பாளர் கணேஷ் வெங்கட்ராமன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அதில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். தொடர்ந்து, பல விதமான போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கணினி பொறியியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்தனர். கணினி பொறியியல் துறை தலைவர் பிரியாராதிகாதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி