உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய ஒற்றுமை பேரணி

தேசிய ஒற்றுமை பேரணி

விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய அரசின் மை பாரத் அமைப்பு சார்பில், வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி, 500 பேர் பங்கேற்கும் ஒற்றுமை பேரணி இன்று நடக்கிறது. இது குறித்து மாவட்ட இளையோர் அலுவலர் சஞ்சனாவாத் கூறியதாவது: நாடு முழுதும் இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் தேச பக்தியை ஏற்படுத்தும் விதத்தில், வல்லபாய் படேலின், 150 வது பிறந்த நாளையொட்டி அணி வகுப்பு மற்றும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. விழுப்புரத்தில் இன்று காலை 10:00 மணிக்கு, கலெக்டர் பெருந்திட்ட மைதானத்தில் ஒற்றுமை பேரணி நடக்கிறது. வரும், 25ம் தேதி வரை நகரங்கள், கிராமங்களில் ஒற்றுமை பேரணிகள், யோகா முகாம், சுகாதார முகாம்கள், சொற்பொழிவுகள், போதைப் பொருள் இல்லாத இந்தியா போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஒற்றுமை பேரணி ஒருங்கிணைப்பாளர் காந்தி, தேசிய இளையோர் மன்றம் பிரதாப், செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபுசெல்வதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை