உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் உள்ள சத்துணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலை உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், ரூ.3,000த்தில் தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு ஊழியர்கள் பணி நியமனம் செய்வதை நிறுத்த வேண்டும் உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் நகராட்சி மைதானத்தில், மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் புனிதா வரவேற்றார். மாவட்ட செயலாளர் மலர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில செயலாளர் ஜெயக்குமாரி நிறைவுரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் அருளரசி, ரெஜினா, தனஞ்செயன், வாசுகி, சுஜாதா, சித்ரா, ஆனந்தன் மற்றும் சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை