மேலும் செய்திகள்
தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்கல்
16-Nov-2024
கண்டமங்கலம் ; கண்டமங்கலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.விழாவிற்கு, கண்டமங்கலம் ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி முருகன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி, பி.டி.ஓ., சிவக்குமார், ஊராட்சி துணைத் தலைவர் பத்மாவதி சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். கண்டமங்கலம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி வரவேற்றார்.விழாவில் ஒன்றிய சேர்மன் வாசன் பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் சுலோசனா, லட்சுமிதேவி, கல்யாணி, வட்டார மேற்பார்வையாளர் பதனசேகரன், பகுதி சுகாதார செவிலியர் இந்திரா, கிராம சுகாதார செவிலியர் சீத்தாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Nov-2024