மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் கண்டன ஆர்ப்பாட்டம்
08-Nov-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அருளரசி, ரெஜினா, தனஞ்செயன் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் புனிதா வரவேற்றார். மாவட்ட செயலாளர் மலர் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட தலைவர் தாஜ் நிஷா வாழ்த்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மொபைல் போன் வழங்காமல் சிம்கார்டு மட்டும் வழங்குவதை நிறுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் அபராஜிதன், மணிக்கண்ணன், சாவித்திரி உட்பட பலர் பங்கேற்றனர். மாநில செயலாளர் ஜெயக்குமாரி நன்றி கூறினார்.
08-Nov-2025