| ADDED : நவ 27, 2025 05:08 AM
திண்டிவனம்: எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் திடீரென்று மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் ஆனந்தன், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த எஸ்.ஐ.ஆர். பணி தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், நகராட்சி அலுவலகத்திற்கு வந்து எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடன் இருந்த சக ஊழியர்கள், அவரை உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். பின்னர், திண்டிவனத்தில் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனந் தன், காலை முதல் தொடர்ந்து எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டதால், பணிச்சுமை காரணமாக மனஉளைச்சல் ஏற்பட்டு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.