மேலும் செய்திகள்
கழிவுநீர் தேக்கமாக மாறிய துறையூர் சின்ன ஏரி
20-Nov-2024
திண்டிவனம்: திண்டிவனம் காந்தி நகர், வகாப் நகரில் தண்ணீர் தெருக்களில் வழிந்தோடும் மழைநீரால் இப்பகுதிகள் தனி தீவுகளானது.பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரி வெள்ள நீரால் காந்தி நகர், வகாப் நகர் மற்றும் சுற்றிள்ள 100க்கு மேற்பட்ட வீடுகளில் நீர் புகுந்தது. இதனால், இப்பகுதிகள் தனி தீவுகளானது. ஐந்து நாட்கள் ஆகியும், இதுவரை வெள்ள நீர் வடியச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இப்பகுதியை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு மட்டும் சென்றனர். அதன் பிறகு இப்பகுதிகளை யாரும் கண்டுகொள்ளவில்லை.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மழை, வெள்ளம் வரும்போது காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து வெள்ள நீர் வருவது வாடிக்கையாக இருந்தும், இதுவரை அதிகாரிகள் ஏரி நீர் வெளியேறுவதற்கு மாற்று வழி ஏற்படுத்தாமல் உள்ளனர். காந்தி நகர், வீராங்குளம் அருகே சுடுகாட்டிற்கு நகராட்சி சார்பில் போடப்பட்ட சாலையை உயர்த்தி போட்டு, அந்த சாலையில் குறுக்கே குழாய் புதைத்துள்ளனர்.இந்த குழாய் வழியாக ஏரியின் உபரி நீர் தொடர்ந்து கீழ்பகுதியான காந்தி நகருக்கு வருகிறது. குழாயை அங்கிருந்து அப்புறப்படுத்தினால் ஏரியின் உபரி நீர் வீராங்குளத்தை தாண்டி, புறவழிச்சாலையிலுள்ள வாய்க்காலில் சென்று கடலில் கலந்துவிடும். இதுபற்றி அதிகாரிகளிடம் பல முறை கூறியும் பலனில்லை. கலெக்டர் நேரில் வந்து வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
20-Nov-2024