மேலும் செய்திகள்
திருநங்கை சாவு போலீசில் புகார்
08-Nov-2024
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். திண்டிவனம் அடுத்த ஒலக்கூரை சேர்ந்தவர் பலராமன், 60; இவர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பைக்கில் பட்டணம் கிராமத்திலிருந்து சலவாதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த பலராமனை அருகில் இருந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலராமன் இறந்தார். புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-Nov-2024