உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு திண்டிவனத்தில் மூதாட்டி தர்ணா

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு திண்டிவனத்தில் மூதாட்டி தர்ணா

திண்டிவனம்: ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முன் மாற்று இடம் வழங்க கோரி மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டிவனம் கிடங்கல் (1) பகுதியில் நகராட்சி பஸ் நிலையம் அருகே உள்ள சிறிய பாலம், சமீபத்தில் வீசிய பெஞ்சல் புயலின் போது அடித்துச் செல்லப்பட்டது. தற்போது அந்த இடத்தில் நகராட்சி சார்பில் புதிய பாலம் கட்டும் பணி நடக்கிறது. பாலத்தையொட்டி ஒரு பக்கம் ரயில்வே இடமும், மற்றொரு பக்கம் நகராட்சி இடமும் உள்ளது. நகராட்சி இடத்தில் பல ஆண்டுகளாக வரி, மின்இணைப்பு பெற்று குடியிருந்து வரும் 5 வீடு, கடைகளை காலி செய்ய வேண்டும் என நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டருக்கு, ஆக்கிரமிப்பை அகற்றும் முன் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 75 வயது மூதாட்டி சுசிலா என்பவர், தன்னுடைய வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, தனக்கு வேறு வீடு கிடையாது என்பதால், மாற்று இடம் வழங்கிவிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பேனர் வைத்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இருப்பினும், நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் யாரும் வராததால் பணி நடைபெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை