உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.5 லட்சம் குட்காவுடன் ஆம்னி வேன் பறிமுதல்

ரூ.5 லட்சம் குட்காவுடன் ஆம்னி வேன் பறிமுதல்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்காவுடன் ஆம்னி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் வேனில் சப்ளை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ப்ரீத்தா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஆம்னி வேனில் கடைகளுக்கு மற்ற பொருட்களோடு குட்கா சப்ளை செய்தது தெரிய வந்தது. உடன், ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களுடன் ஆம்னி வேனை பறிமுதல் செய்து, வேனை ஓட்டி வந்தவரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை