உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூதாட்டம் ஒருவர் கைது

சூதாட்டம் ஒருவர் கைது

விக்கிரவாண்டி:பணம் வைத்து சூதாடிய நபரை போலீசார் கைது செய்து, 2 பேரை தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வி.மாத்துார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய நபர்களை பிடிக்க முயன்ற போது, இருவர் தப்பியோடினர். ஒருவர் பிடிபட்டார். விசாரணையில், மூங்கில்பட்டைச் சேர்ந்த தீபன், 32; என தெரியவந்தது. உடன் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் 3 பைக்குகள் மற்றும் 2000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய எல்.ஆர்.பாளையம் ராஜா, வளவனுார் கார்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ