உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓடைநீரில் சிக்கி ஒருவர் இறப்பு

ஓடைநீரில் சிக்கி ஒருவர் இறப்பு

விழுப்புரம்: காணை அருகே ஓடை நீரில் அடித்து செல்லப்பட்ட ஆசாமி பரிதாபமாக இறந்தார்.காணை அருகே பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார், 56; இவர், கடந்த 2ம் தேதி அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் கட்டியிருந்த மாட்டை வீட்டிற்கு கொண்டு வருவதற்காக சென்றார். அப்போது திருவாமாத்துார் ஓடையில் நீர் வரத்து அதிகமாக வந்ததால், அதில் அய்யனார் அடித்து செல்லப்பட்டு இறந்தார். நீரில் மூழ்கி இறந்த அவரின் உடல் அதே பகுதியில் சிறிது துாரத்தில் கரைஒதுங்கியது. காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை