உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மோதி ஒருவர் பலி

பைக் மோதி ஒருவர் பலி

விக்கிரவாண்டி: சாலையோரம் நின்றிருந்தவர் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, கெடார் அருகே, அத்தியூர் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் விணுசக்கரவர்த்தி,30; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில், இவர் தனது பைக்கில் நண்பர் ராஜேந்திரனை உட்கார வைத்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்றார். அந்த பைக் கெடார் அருகே வந்தபோது சாலையோரம் நின்றிருந்த அதே ஊரை சேர்ந்த பாஸ்கர், 25: என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த படுகாயம் அடைந்த மூவரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று விணுசக்கரவர்த்தி இறந்தார். புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை