மேலும் செய்திகள்
நாளை மின்தடை
8 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
8 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
8 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
8 hour(s) ago
வானூர்: வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. திருச்சிற்றம்பலம் கூட்ரோடு காந்தி மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கமும், தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்த கண் சிகிச்சை முகாம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வில்லியம் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் சுபாஷினி தலைமையிலான மருத்துவக்குழுவினர், கல்லூரி மாணவ, மணவியர்களுக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினர். இதில், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனையின் முகாம் ஒருங்கிணைப்பாளர் ராகவன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகரி நன்றி கூறினார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago