வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருட்டு பயல்க அதான் எடுக்க சொல்றங்க திருட முடியாதுல வாய்க்கு அரிசி தின்னுற வங்க
திண்டிவனம்: ரேஷன் கடைகளில், பி.ஓ.எஸ்., இயந்திரத்தை தராசுடன் இணைக்கும் திட்டத்திற்கு ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில 1328 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 427 ரேஷன் கார்டுகள் உள்ளனர். கார்டுதாரர்களுக்க அரிசி, பருப்பு, பாமயில் என அத்தியவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு விற்பனை முனைய இயந்திரம் (பி.எஸ்.ஓ.,) மூலம் கைரேகை பதிவு வைத்து, எடை போடும் தராசு மெஷினில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு வழங்கும் போது எடை குறைவாக வழங்கப்படுவதாக பொது மக்களிடமிருந்து புகார் வந்தது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி பொருட்கள் வழங்குவதற்கு முன் பி.எஸ்.ஓ., இயந்திரத்துடன் எடைபோடும் தாரசையும் இணைக்கப்பட உள்ளது.இணையதளம் (நெட்) மூலம் இணைத்துள்ளதால், பொருட்களின் அளவு எந்த அளவிற்கு எடை தாரசில் உள்ளதே அதன் அடிப்டையில் பில் வரும். ஏற்கனவே உள்ள நடைமுறையில் இணையதளத்தில் இணைப்பு கிடப்பதில் சிக்கல் காரணமாக, ஊழியர்கள் தங்கள் மொபைல்போன் (வைபை) இணைப்பு கொடுத்து பொருட்களை வழங்கி வந்தனர்.தற்போது ஒரே சமயத்தில் பி.எஸ்.ஓ., இயந்திரம், தாரசுடன் இணைப்பு கொடுக்கப்பட்டு பொருட்கள் வழங்க வேண்டும் என புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.இந்த நடைமுறை விழுப்புரம் மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய நடைமுறையில், ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், கைரேகை பதிவு சரி என்று வந்த பிறகுதான் பொருட்களை வழங்க முடியும்.புதிய நடைமுறையால் வழக்கமாக ஒரு நாளைக்கு 100 கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 40க்கும் குறைவான கார்டுகளுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் நெட் வொர்க் பிரச்னையில் பி.எஸ்.ஓ., இயந்திரம் சரியாக வேலை செய்யாமல் இருப்பது ஒரு பக்கம் என்றாலும், புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் குறைந்தது 5 நிமிடத்திலிருந்து 10 நிமிடம் ஆவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கார்டுதாரர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர்.எனவே, பி.எஸ்.ஒ., இயந்திரத்துடன் எடை போடும் தராசு மெஷினை இணைப்பதில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.
திருட்டு பயல்க அதான் எடுக்க சொல்றங்க திருட முடியாதுல வாய்க்கு அரிசி தின்னுற வங்க