ஓ.பி.ஆர்., பிறந்த நாள் விழா அமைச்சர் மாலை அணிவிப்பு
திண்டிவனம் : தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர்., பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எஸ்.பி., சரவணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகம், திண்டிவனம் சேர்மன் நிர்மலா ரவிச்சந்திரன், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக வாரிய உறுப்பினர் செஞ்சிசிவா, முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், முன்னாள் சேர்மன் ஜனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மஸ்தான் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, முன்னாள் சேர்மன் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், நடராஜன், ஜெ.,பேரவை ரூபன்ராஜ், மகளிரணி தமிழ்ச்செல்வி, மாணவரணி சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.