வெளிமாநில மீட்பு படையினர் வந்தனர் உள்ளூர் அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கல...
விழுப்புரம், காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில், அ.தி.மு.க., அலுவலகத்தையொட்டி, பொன் அண்ணாமலை நகர் உள்ளது. இப்பகுதியில், கனமழை காரணமாக தெருக்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் வடியாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடிந்தபாடில்லை. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும், பிரச்னை தீரவில்லை.இங்கு ஒரு சில தெருக்கள், திருவாமாத்துார் ஊராட்சி நிர்வாகத்திலும், மேலும் சில தெருக்கள் நகராட்சி பகுதியிலும் அமைந்துள்ளது. நிர்வாக எல்லை பிரச்னையால், மழை நீரை வெள்ளியேற்றுவதில், இழுபறி நீடிக்கிறது.கோலியனுார் அடுத்த சின்னகள்ளிப்பட்டு கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்தது. அப்போது, ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியைச் சேர்ந்த மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று, பொதுமக்களை மீட்டனர். ஆனால், உள்ளூர் அதிகாரிகள் எல்லலை பிரச்னையால், எட்டிப் பார்க்கவில்லை என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.