உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இருளில் மேம்பாலம் : வாகன ஓட்டிகள் அச்சம்

இருளில் மேம்பாலம் : வாகன ஓட்டிகள் அச்சம்

திருவெண்ணெய்நல்லுார் : கடலுார் - சித்துார் பிர தான சாலை மேம்பாலத்தில் மின் விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாதம்பட்டு கிராமத்தில் வாகன ஓட்டிகள் நலன் கருதி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் மேம்பாலம் திறக்கப்பட்டது. பாலத்தின் இருபுறமும், 50க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டும் பல மாதங்களாக எரியவில்லை. இதனால் பாலம் முழுதும் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், விபத்து ஏற்படுவதோடு, இரவு நேரங்களில், இரு சக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களை வழிப்பறி கொள்ளையர்கள் மிரட்டி வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. இதனால், இரவில் பாலத்தில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி