உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நீர் ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற ஊராட்சி தலைவர் மனு

நீர் ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற ஊராட்சி தலைவர் மனு

வானூர்: அரசுக்கு சொந்தமான நிலம் மற்றும் நீர் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாசில்தாரிடம், ஊராட்சி தலைவர் மனு கொடுத்துள்ளார்.ராயப்புதுப்பாக்கம் ஊராட்சி தலைவர் ரவிசங்கர், வானுார் தாசில்தார் நாராயணமூர்த்தியிடம் கொடுத்துள்ள மனு;வானுார் அடுத்த ராயப்பேட்டை கிராம இடுகாட்டில் இருந்து காட்டுமேடு பகுதிக்கு செல்லும் வழியில், அரசுக்கு சொந்தமான நீர் ஓடை மற்றும் வண்டி பாதை நிலம் உள்ளது. இதை வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் வழித்தடம் அமைத்து ஆக்கிரமித்துள்ளார். இதனால், மழை நீர் ஏரிக்கு செல்வதற்கு தடையாக இருப்பதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காலங்களில் தண்ணீர் செல்லாமல் அங்கேயே தேங்கி நிற்கும் சூழல் உள்ளது. எனவே, பொது இடம் மற்றும் நீர் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றி, சம்பந்தபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை