மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக கட்டடம் திம்மாபுரத்தில் அமையுமா?
11-Nov-2024
செஞ்சி: சொரத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் வலுவிழந்து மேற்கூரை காரை பெயர்ந்து விழுவதால் பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.வல்லம் அடுத்த சொரத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பராமரிப்பில்லாததால், வலுவிழந்து முன் வராண்டா, அலுவலகத்தின் உள் பகுதியில் மேற்கூரையின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளது.கட்டடத்தின் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன், மழை காரணமாக ஓதம் காத்துள்ளது. இதனால், எப்போது வேண்டுமனாலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதால், அலுவலக பணியாளர்கள் அச்சத்துடன் பணிபுரிகின்றனர்.எனவே இந்த கட்டத்திற்கு பதிலாக புதிய கட்டடம் கட்டுவதற்கு ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11-Nov-2024