நெடுஞ்சாலையோரம் சுற்றுச்சுவரின்றி அச்சம்
விழுப்புரம்: விழுப்புரம் திருச்சி சாலையில், மழைநீர் வெளியேற்றும் கல்வெர்ட் பகுதியில், சுற்றுச்சுவரின்றி விபத்து ஏற்படும் ஆபத்தான நிலை தொடர்கிறது. விழுப்புரம் நகரில், திருச்சி நெடுஞ்சாலையில், பாண்டியன் நகர் அருகே பஸ் நிலையத்திலிருந்து வரும் மழைநீர், கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது. ராட்சத குழாய்களிலிருந்து கழிவுநீர் ஊற்றும் இடத்தில், இரண்டு கல்வெர்ட்கள் மூலம் நெடுஞ்சாலையை கடந்து வாய்க்கால் செல்கிறது. அந்த பகுதியில் மழைநீர், வெள்ள நீர் அரிப்பு காரணமாக, சாலை வரை மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கல்வெர்ட் பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் அச்ச நிலை தொடர்ந்துள்ளது.