பவ்டா குடும்ப நல ஆலோசனை மைய துணைக்குழு கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் பவ்டா குடும்ப நல ஆலோசனை மைய துணைக்குழு கூட்டம் நடந்தது.விழுப்புரம் பவ்டா தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மேலாண் இயக்குனர் ஜாஸ்லின் தம்பி தலைமை தாங்கினார். குடும்ப நல ஆலோசகர் பாத்திமா பீ வரவேற்றார்.கூட்டத்தில், குடும்ப வன்முறையில் சிக்கும் பெண்களுக்கான தீர்வு, உளவியல் ஆலோசனை, மருத்துவ உதவி, சட்ட உதவிகள் உட்பட பெண்களின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ், ஒருங்கிணைப்பாளர் கெஜலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர்கள் தமயந்தி, கமலா, மாவட்ட முன்னாள் சிறார் நீதிமன்றம் நீதிபதி அமுதமொழி, வழக்கறிஞர் பவானி, பவ்டா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.