உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் அமைதி பேரணி; லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை

விழுப்புரத்தில் அமைதி பேரணி; லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை

விழுப்புரம்; விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி நாளை அமைதி பேரணி நடைபெறுவதாக, லட்சுமணமன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி காலை 7:00 மணிக்கு, விழுப்புரம்எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்து, திருச்சி நெடுஞ்சாலையில் கலைஞர் அறிவாலயம் வரை கட்சியினர் அமைதி பேரணி யாக சென்று, கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. இப்பேரணியில், தி.மு.க., நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டும். மே லும், நகரம், பேரூர் பகுதி வார்டுகளிலும், ஒன்றியங்களில் உள்ள ஒவ்வொரு கிளைகளிலும், கருணாநிதியின் உருவ படத்திற்கு, அந்தந்த நிர்வாகிகள் தலைமையில் கட்சியினர் மாலையிட்டு மரியாதை செலுத்தி , கருணா நிதியின் நினைவை போற்றிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ