உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி நடந்து சென்றவர் பலி

கார் மோதி நடந்து சென்றவர் பலி

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் நடந்து சென்றவர் கார் மோதி உயிரிழந்தார்.அவலுார்பேட்டையை அடுத்த ஆதிகான்புரவடை கிராமத்தை சேர்ந்தவர் மாதவன், 40. விவசாயி. கடந்த 11ம் தேதி இரவு 8:45 மணிக்கு அவலுார்பேட்டை பங்குனி உத்திரவிழாவில் பங்கேற்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். கீழ்பென்னாத்துார் சாலையில் சென்றபோது, மாதவன் பின்னால் அதிவேகமாக வந்த பி.ஒய். 01.சி. டபிள்யு. 7575 எண்ணுடைய சுசூகி எர்டிகா கார் மாதவன் மீது மோதியது. காயமடைந்த மாதவன் சம்பவ இடத்திலே இறந்தார். அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !