உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையில் ஓடும் ஏரி உபரி நீர் ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் மக்கள்

சாலையில் ஓடும் ஏரி உபரி நீர் ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் மக்கள்

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே, ஏரி உபரி நீர் சாலையில் செல்வதால், தரைப்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மேல்வைலாமூர் கிராமத்தில் மழையில், ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கடந்த,10 மாதங்களுக்கு முன்னர் இதே ஏரியில் இரும்பு கதவு வெள்ள நீரில் அடித்துச்சென்றது. இதை தற்போது வரையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்கவில்லை. இந்நிலையில் வடகிழக்கு பருவ கனமழை காரணாக இந்த பகுதியில் உள்ள எதப்பட்டு, கரடிக்குப்பம், நாரணமங்கலம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உபரி நீர் வேகமாக வெளியேறி, மேல்மலையனுார் ஏரிக்கு சென்றடைகிறது. மேல்வைலாமூர் ஏரி உபரி நீர் சரியான வாய்க்கால் பராமரிப்பில்லாத நிலையில், 100 க்கும் மேற்பட்ட பயிர் நிலங்களின் வழியாக சாலையின் மீது வெள்ளமாக செல்கிறது. இதேபோல் கோட்டப்பூண்டி ஏரி நிரம்பி உபரி நீர் கரை புரண்டு சாலையில் செல்கிறது. இந்நிலையில், களர் பாளையம், கோட்டப்பூண்டி கிராம மக்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மேலும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படும் சூழல் நிலவி வருகிறது. அங்கு தரைப்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை