| ADDED : நவ 15, 2025 05:00 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையோரத்தில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் நகராட்சி சென்னை நெடுஞ்சாலை வழியாக, சென்னை, திண்டிவனம், திருவண்ணாமலை, செஞ்சி, வேலுார், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் முத்தாம்பாளையம் ஏரி அருகே சாலையோரத்தில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் கால்வாய் மூலம் சாலையோரத்தில் விடப்படுகிறது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் கழிவுகள் கொட்டு வதையும், கழிவுநீர் விடுவதையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.