உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அவலூர்பேட்டை பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு 

அவலூர்பேட்டை பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு 

விழுப்புரம்: வீட்டுமனைப் பட்டா கோரி, அவலுார்பேட்டை பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.செஞ்சி அடுத்த அவலுார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:அவலுார்பேட்டையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். ஊராட்சியில் சொந்தமாக எங்களுக்கு நிலம், வீட்டுமனை இல்லை. போதிய வருமானமின்றி வாடகை வீட்டில் தொடர்ந்து வசிக்க முடியாத நிலை உள்ளது.எனவே, அவலுார்பேட்டையில் உள்ள அரசுக்கு சொந்தமான அரசு பாதை புறம்போக்கு இடங்களில் எங்களுக்கு வீட்டுமனை வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை