உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆக்கிரமிப்பை அகற்றி பட்டா வழங்கக்கோரி மனு

ஆக்கிரமிப்பை அகற்றி பட்டா வழங்கக்கோரி மனு

விழுப்புரம்: செஞ்சி அருகே ஆக்கிரமிப்பை அகற்றி பட்டா வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.செஞ்சி அடுத்த ஜம்போதி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:ஜம்போதி கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு போதிய இடவசதி இல்லாததால், இலவச வீட்டு மனைக்கேட்டு பலமுறை மனு அளித்து வருகிறோம். இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எங்கள் கிராமத்தில் 7 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் பட்டியலின மக்கள், அந்த இடத்தில்தான் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர்.எனவே, அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பட்டியலின மக்களாகிய எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி