உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச பட்டா வழங்கியதை ஆவணத்தில் பதிவு செய்ய மனு

இலவச பட்டா வழங்கியதை ஆவணத்தில் பதிவு செய்ய மனு

விழுப்புரம் : வழுதரெட்டியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதை, கிராம கணக்கில் பதிவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வழுதரெட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:வழுதரெட்டி பகுதியில், 100 குடும்பத்தினர் வீடு கட்டி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வேறு எங்கும் வீடோ, மனையோ கிடையாது. நாங்கள் வசிக்கும் இடத்திற்கு 35 பேருக்கு, அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.ஆனால், கிராம நிர்வாக அலுவலர், பட்டா வழங்கப்பட்டுள்ளதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பிரித்து, கணினியில் பதிவேற்றம் செய்யாமலும், கிராம நிர்வாக ஆவணத்தில் ஏற்றாமலும் இருந்து வருகிறார்.எங்கள் இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டும், கிராம கணக்கு ஆவணத்தில் திருத்தம் செய்து கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்கள். எனவே, அனைவருக்கும் உரிய பதிவேடுகளில் திருத்தம் செய்துகொடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை