உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போன் நேரு மேல்நிலைப் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி சாதனை

போன் நேரு மேல்நிலைப் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி சாதனை

திருவெண்ணெய்நல்லுார்: திருணெய்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. கல்வி சேவையில் 34 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளி, இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளி மாணவன் குகன், கணினி அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதுடன், 561 மதிப்பெண்களுடன் முதல் இடத்தையும், மாணவி அக்ஷ்யா 553 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், மாணவன் ரவிக்குமார் 547 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பிடித்தனர். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களை, பள்ளி தாளாளர் ராம வாசுதேவன் சால்வை அணிவித்து கவுரவித்தார். நிர்வாக இயக்குனர் விஜயசாந்தி வாசுதேவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை