உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இந்தியன் வங்கி பயிற்சி மையத்தில் போட்டோகிராபர், வீடியோகிராபி பயிற்சி

இந்தியன் வங்கி பயிற்சி மையத்தில் போட்டோகிராபர், வீடியோகிராபி பயிற்சி

விழுப்புரம்: இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், போட்டோகிராபர் மற்றும் வீடியோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை அலமேலுபுரத்தில் செயல்பட்டு வரும், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், போட்டோகிராபர் மற்றும் வீடியோகிராபிக்கு 31 நாட்கள் பயிற்சி வரும் 12ம் தேதி துவங்குகிறது. இதில், 18 முதல் 45 வயது வரையுள்ள, 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் பங்கேற்காலம். தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரில் நுாறு நாள் வேலை அட்டை இருப்பவர்களுக்கும், கிராமப்புறத்தினருக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நுாறு நாள் வேலை திட்ட அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04146- 294115 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை