விழுப்புரம் மாவட்டம் படு வீக் அ.தி.மு.க.,வை பலப்படுத்த திட்டம்: சூறாவளி பயணத்திற்கு தயாராகும் மாஜி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதியான, விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, வானுார், திண்டிவனம், மயிலம் ஆகிய 6 சட்டசபை தொகுதிக்கும் மாவட்ட செயலாளராக கோலோச்சி வருபவர் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சண்முகம்.கடலுார், திருவண்ணாமாலை உள்ளிட்ட மாவட்டங்களை இரண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் கட்சி மேலிடம் பிரித்தும் விழுப்புரம் மாவட்டம் மட்டும் பிரிக்கப்படாமல் சண்முகத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகிறது.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குள் வரும் 6 சட்டசபை தொகுதியில், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் (அமைச்சர் பொன்முடி தொகுதி) ஆகிய இரண்டு சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியை விட அ.தி.மு.க.,கூடுதலாக ஓட்டுகள் பெற்றிருந்து.ஆனால் மற்ற தொகுதிகளான விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானுார் ஆகிய நான்கு தொகுதிகளிலும் தி.மு.க., கூடுதல் ஓட்டுகள் பெற்றது. இதில் திண்டிவனம், வானுார் தொகுதியில் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், ஓட்டு வித்தியாசம் அதிகமாக இருந்தது.இதைக் கருத்தில் கொண்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள 6 சட்டசபை தொகுதியிலும் கட்சியை பலப்படுத்த சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.வரும் அக்டோபர் 2 ம் தேதி திண்டிவனம் தொகுதியில் துவங்க உள்ளார். நிர்வாகிகள் அனைவரையும் ஒரு இடத்தில் திரட்டி, குறைகளைக், கேட்டு ஆலோசனை வழங்க உள்ளார்.